பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா மற்றும் ஸ்வீடன் விருப்பம் !!

  • Tamil Defense
  • March 9, 2021
  • Comments Off on பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா மற்றும் ஸ்வீடன் விருப்பம் !!

நேற்று இணையம் வழியாக ஸ்வீடன் பிரதமர் ஸ்டீஃபன் லோஃப்வென் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர், இதில் இந்திய வெளியுறவு செயலர் (மேற்கு) விகாஸ் ஸ்வருப் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளும் பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைந்த செயல்பாடு முக்கியம் என்ற கருத்தை ஏற்று கொண்டனர்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சாப் நிறுவனம் 114 பல் திறன் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் தனது க்ரைப்பன் போர் விமானத்துடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயமும் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது, இதில் 18 விமானங்களை ஸ்வீடனில் தயாரித்துவிட்டு மீதமுள்ள இந்தியாவில் தயாரிக்க ஸ்வீடன் தரப்பு விருப்பம் தெரிவித்தது.

சாப் நிறுவனத்தின் ஐடாஸ் மின்னனு போர்முறை பாதுகாப்பு அமைப்பு, நமது த்ருவ் ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தி வரப்படுகிறது.

இந்த அமைப்பு லேசர் மற்றும் ஏவுகணை தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.