Breaking News

சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு புதிய துப்பாக்கி

  • Tamil Defense
  • March 2, 2021
  • Comments Off on சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு புதிய துப்பாக்கி

பாக் உடனான எல்ஓசி எல்லை மற்றும் சீனா உடனான எல்ஏசி எல்லை பகுதிகளில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு புதிய Negev LMG ( இலகு ரக இயந்திர துப்பாக்கி) மார்ச் 2வது வாரம் முதல் வழங்கப்பட உள்ளது.

இராணுவத்திற்கான அவரச தேவை கொள்முதலின் கீழ் பெறப்பட்ட இந்த புதிய Negev NG-7 துப்பாக்கிகளின் முதல் தொகுதி சீன மற்றும் பாக் எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கடந்த வருடம் மார்சில் 16500 இலகுரக இயந்திர துப்பாக்கிகள் ஆர்டர் செய்யப்பட்டன.இதில் முதல் தொகுதி 6000 துப்பாக்கிகள் கடந்த மாதம் இந்தியா வந்தடைந்தது.

இவை தற்போது இந்திய இராணுவத்தில் உள்ள குறைந்த சக்தியுடைய 5.56x45mm INSAS இலகுரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.