
இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வெடிபொருட்களை சப்ளை செய்யும் முன்னனி அமைப்புகளில் ஒன்று ஆயுத தொழிற்சாலைகள் வாரியம்.
மிக மிக நீண்ட காலமாகவே இந்த அமைப்பு மீது தரம் குறைந்த வெடிபொருட்களை தயாரித்து வழங்குவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வெடி விபத்துகளும் ஏற்பட்டு உயிர் பலி வாங்குகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் காஷ்மீரின் அக்னூரிலும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும் நடைபெற்ற சோதனைகளில்,
சயான் கோஷ் என்ற ராணுவ வீரரும், எல்லை பாதுகாப்பு படை வீரர் சதிஷ் குமார் ஆகியோர் பிரங்கியின் குழாயில் இருந்து வெளியேறிய உடனேயே குண்டு வெடித்ததால் மரணமடைந்தனர்.
இத்தகைய விபத்துகளால் நாம் வீரர்களை இழப்பதோடு மட்டுமின்றி பலர் கை கால்களை இழக்கின்றனர், பிரங்கிகள் கடுமையான சேதம் அடைகின்றன.
ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை சீர்படுத்த அரசு இனியும் கால தாமதம் செய்வது நல்லதல்ல.