சிந்துநேத்ரா செயற்கைகோள் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • March 1, 2021
  • Comments Off on சிந்துநேத்ரா செயற்கைகோள் ஒரு பார்வை !!

நேற்று ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி15 ராக்கெட் மூலமாக சிந்துநேத்ரா எனும் செயற்கைகோள் ஏவப்பட்டது.

இந்த செயற்கைகோள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு செயற்கைகோள் ஆன இது இந்திய பெருங்கடல் பகுதியை கண்காணிக்கும் மேலும், வர்த்தக கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை தானே பிரித்தறியும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவைப்பட்டால் தென்சீன கடல் பகுதி மற்றும் கடற்கொள்ளையர்கள் நிரம்பிய ஏடன் வளைகுடா பகுதிகளையும் திறம்பட கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.