
இந்திய விமானப்படை தனது போர் விமான படையணிகளை புதிய விமானங்களை கொண்டு உயிர்ப்பித்து வருகிறது.
அந்த வகையில் முதலாவது ரஃபேல் படையணி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் செயலில் உள்ளது.
தற்போது இரண்டாவது ரஃபேல் படையணியும் மேற்கு வங்க மாநிலம் ஹசிமாரா படை தளத்தில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
மே மாதம் ரஃபேல் விமானங்கள் இந்த படைதளத்திற்கு செல்ல உள்ளன , ஏப்ரல் மாதம் படையணி செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
மேலும் இதே காலகட்டத்தில் ஃபிரான்ஸில் பயிற்சி பெற்று வரும் இந்திய விமானிகள் பயிற்சி முடித்து நாடு திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.