கடற்படை கப்பலில் விஞ்ஞானி மரணம் !!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களின் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.

அப்போது அதில் பணியாற்றி வந்த ரஷ்ய விஞ்ஞானி க்ராசேவ் டிமித்ரி சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக இந்திய கடற்படை மருத்துவமனையான அஸ்வினிக்கு அவரை கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்திய கடற்படை சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.