துருக்கிக்கு அதிநவீன போர் விமானங்கள் விற்க ரஷ்யா விருப்பம் !!

ரஷ்யா துருக்கிக்கு தனது அதிநவீன சுகோய்-35 மற்றும் சுகோய்-57 ஸ்டெல்த் போர் விமானத்தை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது.

அதோடு நில்லாமல் துருக்கி சொந்தமாக தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை டி.எஃப்.எக்ஸ் போர் விமானத்திற்கான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே துருக்கிக்கான எஃப்35 ஐந்தாம் தலைமுறை
போர் விமான விற்பனையை அமெரிக்கா ரத்து செய்த நிலையில்,

ரஷ்யாவின் சுகோய்-57 அதற்கான மாற்றாக அமையும் மேலும் துருக்கி பயன்படுத்தி வரும் எஸ்-70 எனும் ரஷ்ய ட்ரோனை இந்த விமானத்தில் இருந்து பயன்படுத்த முடியும்.

இது நிச்சயமாக துருக்கியின் எதிர்நாடாக இருக்கும் கீரிஸ் நாட்டிற்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.