நிலாவில் ஆராய்ச்சி நிலையம் கட்ட ரஷ்யா சீனா திட்டம் !!

  • Tamil Defense
  • March 13, 2021
  • Comments Off on நிலாவில் ஆராய்ச்சி நிலையம் கட்ட ரஷ்யா சீனா திட்டம் !!

ரஷ்ய மற்றும் சீன விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளான ராஸ்காஸ்மோஸ் மற்றும் தேசிய விண்வெளி மேலாண்மை அமைப்பு ஆகியவை இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.

இரு நாடுகளும் இணைந்து உருவாக்கும் இந்த ஆராய்ச்சி மையத்தை மற்ற நாடுகளும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆராய்ச்சி நிலையமானது நிலவின் தரைப்பரப்பு அல்லது நிலவின் சுற்றுவட்ட பாதையில் கட்டமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணிகளுக்கான திட்டங்களை இரு நாடுகளும் பகிர்ந்து மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.