இந்தியாவின் சூப்பர் சுகோய் திட்டத்திற்கு ரஷ்யா ஒப்புதல் ??

  • Tamil Defense
  • March 4, 2021
  • Comments Off on இந்தியாவின் சூப்பர் சுகோய் திட்டத்திற்கு ரஷ்யா ஒப்புதல் ??

இந்தியா ஏறத்தாழ 200 சுகோய்30 போர் விமானங்களை அதிநவீன சூப்பர் சுகோய் ஆக தரம் உயர்த்த நினைக்கிறது.

இதற்கு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறியுள்ளது.

நவீன ரேடார், ஏவியானிக்ஸ் அமைப்புகள் இதில் அடக்கம், ரஷ்ய உதவியின்றி இதனை செய்ய முடியும் என ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.

ஆனால் இந்திய விமானப்படை சுகோய் விமானத்தின் முதன்மை தயாரிப்பாளர் எனும் முறையில் ரஷ்யாவின் ஒப்புதல் தேவை என கருதுகிறது காரணம் எதிர்தாலத்தில் ஏதேனும் தொழில்நுட்ப கருவிகள் வாங்குவதில் ரஷ்யா பிரச்சினை செய்யலாம்.

இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது மேலும் ரஷ்யா தொழில்நுட்ப ஆலோசகராகவும் உதவலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரம்மாஸ் ஏவுகணைகளை சுமக்க சுகோய் விமானங்களை மேம்படுத்த இந்தியா ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்த போது ரஷ்யா மிகப்பெரிய தொகையை கேட்டது

ஆனால் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அதில் 50% பணம் கூட செலவாகாமல் விமானங்களை தரம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.