
கல்யானி ரஃபேல் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ( Rafale advanced systems) என்பது இந்தியாவின் கல்யானி மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் சிஸ்டம்ஸின் இந்திய கூட்டு தயாரிப்பு பிரிவாகும்.
இந்த நிறுவனம் தயாரித்த முதல் தொகுதி இடைத்தூர தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் வெளிவந்துள்ளன.
அடுத்த சில ஆண்டுகளில இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு மேற்குறிப்பிட்ட 1000 ஏவுகணைகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ஏவுகணைகளை படையில உள்ள அமைப்புகளுடன் இணைக்கும் பணியை பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இதுபற்றி கல்யானி குழுமத்தின் தலைவர் பாபா கல்யானி பேசுகையில் “இது புதிய தொடக்கம் இந்த ஒப்பந்தத்தை கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னரே நிறைவு செய்வோம்” என கூறினார்.