சீனாவின் கனிமவள ஏற்றுமதி பிடியை தளர்த்த க்வாட் திட்டம் !!

  • Tamil Defense
  • March 13, 2021
  • Comments Off on சீனாவின் கனிமவள ஏற்றுமதி பிடியை தளர்த்த க்வாட் திட்டம் !!

தற்போது உலகின் மிகப்பெரிய கனிமவள உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக சீனா உள்ளது.

தற்போதைய நிலையில் சீனா உலக கனிமவள வர்த்தகத்தில் சுமார் 60% அளவுக்கு பங்கு வகிக்கிறது, இதன் காரணமாக ஸ்மார்ட்ஃபோன்கள் முதலாக பல கருவிகளை உற்பத்தி செய்ய சீனாவை நம்ப வேண்டிய நிலை உள்ளது.

இதனை மாற்ற க்வாட் அமைப்பு புதிய கனிமவள உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அமைப்பை உருவாக்க திட்டமிட்டு உள்ளன மேலும் கனிமவள வர்த்தகம் சார்ந்த உலகளாவிய விதிகளை மாற்றி அமைக்கவும் உள்ளனர்.

மிகப்பெரிய நிறுவனங்கள் கூட சீன கனிமவளங்களை நம்பி உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை மேலும் சீனா இதனை கொண்டு பெரும் வளர்ச்சி அடைந்து உள்ளது.

இந்த கனிமவள வர்ததகத்தை தனது தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்கிறது அதாவது சீனா தனக்கு எதிரான நாடுகளை பணியவைக்க கனிமவள ஏற்றுமதியை கருவியாக பார்க்கிறது.

அதாவது ஏற்றுமதியை நிறுத்துவது மேலும் விலையை அதிகரிப்பது, சந்தையில் தட்டுபாட்டை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

சீனா உற்பத்தியை விட கனிமவளங்களை இறக்குமதி செய்து சுத்திகரித்து பின்னர் ஏற்றுமதி செய்வதில் தான் அதிக கவனம் செலுத்துகிறது காரணம் சுத்திகரிப்பில் வரும் கழிவுகள் சார்ந்த சுற்றுச்சூழல் விதிகள் அங்கு தளர்வாகவும் மற்ற நாடுகளில் கடினமாகவும் இருக்கிறது.

எனவே நான்கு நாடுகளும் இதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி தாங்களே சுத்திகரிப்பு செய்து வர்த்தகம் செய்யவும் முடிவு செய்துள்ளன.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் க்வாட் அமைப்பின் கை இந்த துறையில் ஓங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.