க்வாட் அமைப்பின் தலைவர்கள் முதல்முறையாக சிறப்பு ஆலோசனை !!

  • Tamil Defense
  • March 11, 2021
  • Comments Off on க்வாட் அமைப்பின் தலைவர்கள் முதல்முறையாக சிறப்பு ஆலோசனை !!

சீனாவின் அச்சுறுத்தல் உலகளாவிய ரீதியில் பலத்த எதிர்வினைகளை அந்நாட்டிற்கு எதிராக ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து சீனாவை கட்டுபடுத்தும் நோக்கில் க்வாட் எனப்படும் மிகப்பெரிய மிக சக்திவாய்ந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதில் அமெரிக்கா இந்தியா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது இந்நாடுகளின் தலைவர்கள் முதல்முறையாக ஆலோசனை நடத்த உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இணையம் வாயிலாக வருகிற மார்ச் 12ஆம் தேதி இவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.