வங்க கடலில் கூடும் க்வாட் கடற்படைகள் !!

  • Tamil Defense
  • March 15, 2021
  • Comments Off on வங்க கடலில் கூடும் க்வாட் கடற்படைகள் !!

அடுத்த மாதம் வங்க கடல் பகுதியில் க்வாட் அமைப்பின் கடற்படைகள் போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

மேலும் இந்த போர் பயிற்சிகளில் ஃபிரான்ஸ் நாட்டு கடற்படையும் பங்கேற்க உள்ளது.

லா பெருஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சிகள் அடுத்த மாதம் ஏப்ரல் 4 – 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சிகளில் ஐந்து நாடுகளின் முன்னனி போர்க்கப்பல்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.