
இந்திய விமானப்படையில் சுமார் 405 விமானிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பாதுகாப்பு இணை அமைச்சர் ஶ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவர் பதில அளிக்கும் போது இதனை தெரிவித்தார்.
மேலும் பேசுகையில் விமானப்படையின் தேவை 4239 விமானிகள் ஆவர் ஆனால் தற்போது 3834 விமானிகள் மட்டுமே உள்ளதாக கூறினார்.
மேலும் 260 விமானங்கள் விமானிகளை பயிற்றுவிக்க பயன்படுத்தி வரப்படுவதாகவும்
அந்த பணிகளுக்கு பிலாட்டஸ் பிசி-7, கிரண் மார்க்-1 மற்றும் ஹாவ்க் மார்க்-132 அதிநவீன ஜெட் பயிற்சி விமானம் ஆகியவை
பயன்படுத்தி வரப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.