
கடந்த சில நாட்களாக தென் சீன கடல் பகுதியில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சொந்தமான “விட்சுன் ரீஃப்” அருகே சீன படகுகள் குவிந்துள்ளன.
சுமார் 200 மீன்பிடி படகுகள் சீன அரசின் துணையோடு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக சந்தேகிக்க படுகிறது.
இதனையடுத்து நேற்று ஃபிலிப்பைன்ஸ் கடற்படை தனது இலகுரக போர் விமானங்களை மேற்குறிப்பிட்ட படகுகளை அச்சுறுத்த அனுப்பியது.
மேலும் ஃபிலிப்பைன்ஸ் கடற்படையும் தனது கடல் பகுதிகளில் தனது நடவடிக்கைகளை தீவிரபடுத்தி உள்ளது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்ஸானா பேசும்போது ஃபிலிப்பைன்ஸ் கடற்படை மற்றும் விமானப்படை எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.