
900கிமீ தூரம் வரை செல்லக்கூடிய சஹீன்-1ஏ என்ற பலிஸ்டிக் அணு ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிநவீன வழிகாட்டு கருவிகளுடன் இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.இந்த சோதனையை பாக்கின் மூத்த அதிகாரிகள் பலர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த சோதனைக்கு பாக் பிரதமர் இம்ரான் மற்றும் பாக் தலைவர் அல்வி ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 290கிமீ செல்லக்கூடிய கஸ்நாவி என்ற பலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.