பலூச்சிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • March 1, 2021
  • Comments Off on பலூச்சிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் !!

சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து சுமார் 46 பில்லியின் டாலர்கள் மதிப்பிலான சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதையை உருவாக்கி வருகின்றன.

பலூச்சிஸ்தானில் உள்ள க்வதர் துறைமுகம் மூலமாக சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஸின்ஜியாங் மாகாணத்தை மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைப்பது இதன் நோக்கம் ஆகும்.

மேலும் பலூச்சிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அளவிலான இயற்கை வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் பலூச் மக்களுக்கு இதனால் எந்தவித நன்மையும் இல்லை மாறாக பாகிஸ்தானின் பிற மாகாண மக்கள் குறிப்பாக பஞ்சாப் மாகண மக்கள் மற்றும் சீனர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு ஆயுத குழுக்கள் பிரிந்து செல்ல போராடி வருகின்றனர் அவ்வப்போது இத்திட்டம் சார்ந்த முக்கிய இலக்குகளை தாக்குவது என நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் சுமார் இரண்டு டிவிஷன் ராணுவம் மற்றும் இரண்டு பிரிவு துணை ராணுவ படைகளை பலூச்சிஸ்தானில் குவிக்க உள்ளது.

இது பற்றிய தகவலை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் நேற்று வெளியிட்டு உள்ளார்.