
இந்தியாவின் Ordnance Factory Board (OFB) மீண்டும் கேர்டிஜ் புல்லட்கள் வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுள்ளது.மகாராஸ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள வாரங்கான் தொழில்சாலை இந்த குண்டுகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கும்.
இதை தனது டிவிட்டர் பக்கம் மூலமாக OFB உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அம்யுனிசன்கள் அமெரிக்க சிவில் மார்க்கெட்டிற்கு செல்கிறது.
5.56*45 mm NATO MI93 Ball அம்யூனிசன்களை தான் ஆர்டினன்ஸ் தொழல்சாலை தயாரித்து வழங்க உள்ளது.
இதற்கு முன் பெறப்பட்ட ஆர்டரை தகுந்த நேரத்திலும் சரியான தரத்திலும் வழங்கியமையால் மீண்டும் ஆர்டரை பெற்றுள்ளது OFB.
எத்தனை அளவு புல்லட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறித்து OFB எந்த தகவலும் வெளியிடவில்லை.முதல் முறை என்பதால் குறைத்த அளவிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.