விமானம் தாங்கி கப்பலா ? அல்லது நீர்மூழ்கியா?

விமானந்தாங்கி கப்பல்களை விடவும் நீர்மூழ்கிகள் முக்கியம் !!

சமீபத்தில் குஜராத் மாநிலம் கேவாடியாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் இந்திய கடற்படையின் தளபதிகள் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை விட நீர்மூழ்கி கப்பல்கள் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

அதன்படி 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகிறது.

விமானந்தாங்கி கப்பல்கள் கட்டவும் இயக்கவும் பராமரிக்கவும் பெரும் செலவு ஏற்படுத்தும் தளவாடங்கள் ஆகும்.

அதே நேரத்தில் வழக்கமான டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களால் அதிக தூரம் பயணிக்கவோ அல்லது தொடர்ந்து நீருக்கு அடியே இருக்கவும் முடியாது.

ஆனால் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுக்கு அத்தகைய சிக்கல் இல்லை, எதிரியிடம் சிக்காமல் மேற்கே அட்லாண்டிக் கிழக்கே தென்சீன கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல்களில் இயங்க முடியும்.

மேலும் இவற்றை பராமரிக்க மற்றும் இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சீன கடற்படையிடம் இத்தகைய ஒரு டஜன் நீர்மூழ்கி கப்பல்கள் உண்டு, இனியும் பல நவீன நீர்மூழ்கிகளை கட்டும் திட்டமும் உண்டு.

ஆகவே அதிகரித்து வரும் சீன கடற்படையின் சக்தியை எதிர்கொள்ள இந்திய கடற்படையும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை நோக்கி திரும்பி உள்ளது.

விரைவில் ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ்.அரிகாட் ஆகியவை படையில் இணைய உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.