முப்படைகளில் 1 லட்சம் காலி பணியிடங்கள் விரிவான அறிக்கை உள்ளே !!

  • Tamil Defense
  • March 24, 2021
  • Comments Off on முப்படைகளில் 1 லட்சம் காலி பணியிடங்கள் விரிவான அறிக்கை உள்ளே !!

இன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை ஶ்ரீபத் நாயக் அவர்களிடம் முப்படைகளில் நிலவும் ஆட் பற்றாக்குறை பற்றி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் முப்படைகளையும் சேர்த்து சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும்,

அதிகபட்சமாக தரைப்படையில் சுமார் 86,325 பணியிடங்கள் காலியாக உள்ளன அதில் 6975 அதிகாரிகள் பணியிடங்களும் 79,349 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய கப்பல் படையை பொறுத்தவரையில் 13, 361 பணியிடங்கள் காலியாக உள்ளன அவற்றில் 1044 அதிகாரிகள் பணியிடங்களும் 12,317 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடைசியாக இந்திய விமானப்படையில் சுமார் 7,910 காலி பணியிடங்கள் உள்ளன அவற்றில் 589 அதிகாரிகள் மற்றும் 7321 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பற்றாக்குறை பணி ஒய்வு, விருப்ப ஒய்வு, காயங்கள் உடலுறுப்பு இழப்புகள், வீரமரணங்கள் போன்றவற்றால் நிலவி வருகிறது.

இந்த பற்றாக்குறை அச்சமளிக்கும் வகையிலானது இல்லை பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் முப்படைகளில் பணிபுரியும் பெண்கள் பற்றி பேசுகையில் 6796 பெண்கள் தரைப்படையிலும், 1602 பெண்கள் விமானப்படையிலும்,696 பெண்கள் கப்பல் படையிலும் பணி புரிவதாக அவர் கூறினார்.