
அடுத்த வாரம் ஃபிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு மூன்று ரஃபேல் விமானங்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஏப்ரல் மாதம் 9 ரஃபேல் போர் விமானங்கள் வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹஷிமாரா படைத்தளத்தில் இருந்து ரஃபேல் விமானங்கள் இயங்க உள்ளன;
இந்த படைத்தளத்தில் இருந்து தான் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பட உள்ளது மேலும் இது சீன எல்லையோரம் செயல்படும் என்பது கூடுதல் சிறப்பு.
ரஃபேல் விமானங்களின் வருகை தேதியை இறுதி செய்து விமானங்களை ஓட்டி வர இந்திய விமானிகள் ஃபிரான்ஸ் சென்றுள்ளனர்.
இந்த வருட இறுதியில் இந்தியா ஆர்டர் செய்த அனைத்து (36) ரஃபேல் விமானங்களும் டெலிவரி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.