கடலோர காவல்படையில் புதிய கப்பல் இணைப்பு !!

  • Tamil Defense
  • March 25, 2021
  • Comments Off on கடலோர காவல்படையில் புதிய கப்பல் இணைப்பு !!

நேற்று இந்திய கடலோர காவல்படையில் ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்கிற புதிய கடலோர ரோந்து கலன் இணைக்கப்பட்டது.

இந்த கப்பல் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டுமான தளத்தில் லார்சன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தால் கட்டபட்டதாகும்.

இந்த கப்பலில் ஒர் 30மில்லிமீட்டர் பிரங்கி மற்றும் ரிமோட் மூலமாக இயக்கப்படும் இரண்டு 12.7 மில்லிமீட்டர் கனரக இயந்திர துப்பாக்கிகள் உள்ளன.

இந்த கப்பல் கடலோர பாதுகாப்பு ரோந்து, பேரிடர் மேலாண்மை, தேடுதல் மற்றும் மீட்பு, தீயணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள வல்லது.

ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா கப்பலானது தூத்துக்குடி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்படும், இந்த கப்பல் கிழக்கு பிராந்திய கடலோர காவல்படையின் கட்டுபாட்டில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் கட்டளை அதிகாரியாக டி.ஐ.ஜி அலெக்ஸ் தாமஸ் பணியாற்றுவார் அவருடன் 13 அதிகாரிகள் மற்றும் 88 வீரர்கள் கப்பலில் இருப்பர்.

இந்த கப்பலில் 1 ஹெலிகாப்டர், 4 அதிவேக படகுகள் மற்றும் 2 ரப்பர் படகுகள் இருக்கும் மேலும் 5 ஆயிரம் கடல்மைல் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.

ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா ரோந்து கலன் அதிகபட்சமாக சுமார் 26 நாட் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது, இந்த கப்பல் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் முன்னிலையில் படையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.