புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை !!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை விமானப்படை மற்றும் தரைப்படை ஆகியவை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்திய தரைப்படையின் பிரங்கி படை இதன் மூலமாக கூடுதல் வலுப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

40 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட இந்த ஏவுகணை நவீன வழிகாட்டி அமைப்பு மூலமாக வான் இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது.

இந்த சோதனை ஒரு ட்ரக்கில் இருந்து இந்திய தரைப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் கூட்டாக நடத்தப்பட்டது.