
மத்திய உள்துறை அமைச்சகம் ட்ரோன்கள் பயன்பட்டுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி தில்லி, சென்னை, மும்பை, கல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையங்களை சுற்றி ஐந்து கிலோமீட்டர் பகுதியில் ட்ரோன்களை பறக்க விடக்கூடாது.
மேலும் ராணுவ விமான தளங்கள், பொது மற்றும் தனியார் விமான தளங்களை சுற்றியும் சுமார் 3 கிலோமீட்டர் பகுதிக்கு ட்ரோன்களை பறக்க விடக்கூடாது.
மேலும் சர்வதேச எல்லைகளில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரையிலான பகுதிகளிலும்
ராணுவ தளங்கள், கன்டோன்மென்ட் பகுதிகளிலும் இந்த தடை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்குறிப்பிட்ட விதிகளை மீறினால் சுமார் 50,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.