
இந்தியா சொந்தமாக கட்டி வரும் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் விரைவில் கடல்சோதனைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது, மேலும் இந்த வருடமே படையில் இணையலாம் என கூறப்படுகிறது.
ஆகவே தற்போது இந்த விமானந்தாங்கி கப்பலில் என்ன விமானம் நிறுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
இந்த நிலையில் டெட்பஃப் எனப்படும் புதிய ஐந்தாம் தலைமுறை கடற்படை போர் விமானத்தை இதில் நிறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த டெட்பஃப் போர் விமானம் அளவில் ரஃபேல் எம் ரகத்திற்கு நிகராகவும் ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அதை விட மேம்பட்ட விமானமாகவும் இருக்கும்,
காரணம் இதில் உள்ள ஸ்டெல்த் அம்சங்கள் மற்றும் சில ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பங்கள்ஆகும்.
இது தேஜஸை போலில்லாமல் ஆரம்பத்திலேயே கடற்படைக்காக வடிவமைக்கப்படுவதால் பணிகளும் விரைவாக முடியும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த விமானம் 11 டன்கள் சுமைதிறனை கொண்டது, இறக்கை மற்றும் வயிற்று பகுதியில் தேவையான தளவாடங்களை சுமக்கும் என கூறப்படுகிறது.
முதலாவது டெட்பஃப் கடற்படை போர் விமானம் 2026ஆம் ஆண்டு பறந்தாலும் படையில் இணைய சில காலம் ஆகும்.
ஆகவே இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்த வேறு போர் விமானங்களை வாங்க முயற்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சுமார் 57 புதிய கடற்படை போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்பது கூடுதல் தகவல்.