1 min read
இந்தியாவின் புதிய துர்கா லேசர் கருவி !!
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 100 கிலோவாட் திறன் கொண்ட துர்கா எனும் லேசர் கருவியை உருவாக்கி வருகிறது.
இந்த கருவி இலகுரகமாகவும் கடற்படை விமானப்படை மற்றும் தரைப்படைகளால பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக சுமார் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் சுமார் 50 விஞ்ஞானிகள பல்வேறு வகையான லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துர்கா திட்டம தற்போது வரைவு நிலையில் உள்ளதாகவும் நிதி கிடைத்தவுடன் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் எனவும் கூறப்படுகிறது.