1 min read
ரஃபேல் படையணியின் கட்டளை அதிகாரி பணியிடமாற்றம்; காரணம் என்ன ??
இந்திய விமானப்படையின் முதலாவது ரஃபேல் விமான படையணியின் கட்டளை அதிகாரி க்ருப் கேப்டன் ஹர்கிரத் சிங் ஆவார்.
தற்போது இவர் ஷில்லாங்கில் உள்ள கிழக்கு வான்படை கட்டளையக தலைமை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அங்கு மேற்கு வங்க மாநிலம் ஹசிமாரா தளத்தில் இரண்டாவது ரஃபேல் படையணி செயல்பாட்டுக்கு வருவதை மேற்பார்வை செய்ய உள்ளார்.
இது வழக்கமான நடைமுறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.