NSG, CRPF படைகளுக்கு புதிய தலைமை அதிகாரிகள் நியமனம் !!

தேசிய பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் இ.கா.ப இன்று ஒய்வு பெற்றார்.

அதையடுத்து உத்தரகாண்ட் தொகுதி இ.கா.ப அதிகாரியான எம்.ஏ.கணபதி தேசிய பாதுகாப்பு படையின் இயக்குனராக நியமனம் செய்யபட்ட நிலையில் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

அதே போல மத்திய ரிசர்வ் காவல்படை இயக்குனர் ஜெனரல் மகேஸ்வரி இ.கா.ப இன்று ஒய்வு பெற்றார்.

அதனையடுத்து மேற்கு வங்க தொகுதி இ.கா.ப அதிகாரியான குல்தீப் சிங் இ.கா.ப புதிய இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.