
சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பாராளுமன்ற நிலைக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது,
அப்போது செய்தியாளர் ஒருவர் இஸ்ரோ இனி செயற்கைகோள்களை ஏவும் பணிகளை மேற்கொள்ளாது என்பது உண்மையா எனும் கேள்வியை முன்வைத்தார்,
அதற்கு பதிலளித்த பேசிய பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் திரு. ஜெய்ராம் ரமேஷ் இனி செயற்கைகோள் ஏவும் பணிகளை கவனிக்க நியு ஸ்பேஸ் இன்டியா லிமிடெட் எனும் புதிய பிரிவு உருவாக்கபட்டு உள்ளதாகவும்,
இந்த புதிய அமைப்பு அமைப்பு பொதுத்துறையை சேர்ந்தது எனவும் இஸ்ரோவின் வர்த்தக பிரிவு எனவும் அவர் கூறினார்,
மேலும் பேசுகையில் இந்த அமைப்பு தான் இனி விண்ணில் உள்ள இந்திய செயற்கைகோள்களை கட்டுபடுத்தும் எனவும், புதிய செயற்கைகோள் மற்றும் ராக்கேட் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் எனவும்,
இஸ்ரோ அமைப்பானது பிற கிரகங்களை ஆராய்ச்சி செய்வது, மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை மட்டுமே கையாளும் எனவும் அவர் கூறினார்.