புதிய வெடிகுண்டு அமைப்பை உருவாக்கிய டி.ஆர்.டி.ஒ !!

  • Tamil Defense
  • March 4, 2021
  • Comments Off on புதிய வெடிகுண்டு அமைப்பை உருவாக்கிய டி.ஆர்.டி.ஒ !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய வெடிகுண்டு அமைப்பை உருவாக்கி உள்ளது.

பன்ட் ப்ளாஸ்டிங் டிவைஸ் (தடுப்பு அழிப்பான்) எனும் இந்த கருவி இதன் முந்தைய மார்க்1 ரகத்தில் இருந்து மார்க்2 ரகத்திற்கு தரம் உயர்த்தபட்டதாகும்.

இதற்கான சோதனைகளை தரைப்படையின் 120ஆவது பொறியாளர்கள் ரெஜிமென்ட் மேற்கொண்டது.

போர்க்களத்தில் நமது ராணுவ வாகனங்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில் கட்டப்பட்ட தடுப்புகளை மிக குறைந்த நேரத்தில் அகற்ற இது உதவும்.

ஒரு ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்ட வெடிபொருள் அமைப்பு தடை அமைப்புகள் துளைத்து செல்லும்,

அதனால் ஏற்பட்ட துளைக்கு உள்ளாக வெடிபொருள் சென்று வெடிக்கும் இந்த வெடிப்பால் தடை அமைப்பு சிதறி போகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.