
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து ஒரு இடைதூர வான் பாதுகாப்பு ஏவுகணையை தயாரித்தன.
பராக்-8 தான் இந்த இடைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை, தற்போது அதிக தூரம் செல்லக்கூடிய மேம்படுத்தபட்ட வடிவம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சுமார் 150 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக்கூடிய இது தரை வான் கடல் என முப்பரிமாண தன்மை கொண்டது.
இதனை இந்தியாவின் கல்யானி குழுமம் மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் சிஸ்டம்ஸ் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரித்து வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மாஸ் மற்றும் எஸ்.எஃப்.டி.ஆர் ஏவுகணைகளை இப்படி பயன்படுத்தி கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.