மியான்மரில் பொதுமக்கள் மீது விமானப்படை தாக்குதல் !!

கடந்த சனிக்கிழமை அன்று மியான்மர் விமானப்படை அந்நாட்டின் தென்கிழக்கு மாகாணமான கேரனில் தாக்குதல் நடத்தியது.

இதில் சிலர் கொல்லபட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர், இதை அப்பகுதியை சேர்ந்த கிளர்ச்சி அமைப்பான கேரன் தேசிய யூனியன் உறுதி செய்துள்ளது.

மேலும் மியான்மர் ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி பல்லாயிரம் மக்கள் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

கேரன் தேசிய யூனியன் அமைப்பு பல வருடங்களாக மியான்மர் அரசை எதிர்த்து போராடி வந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைபற்றிய பிறகு பொதுமக்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை பிரயோகித்து வருகிறது.

இந்த அடக்குமுறைகளால் 200க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.