லடாக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய மிகப்பெரிய அளவில் திட்டங்கள் !!

  • Tamil Defense
  • March 23, 2021
  • Comments Off on லடாக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய மிகப்பெரிய அளவில் திட்டங்கள் !!

லடாக் மாநிலத்தில் புதிதாக சுமார் 36 ஹெலிகாப்டர் தளங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் இந்திய ராணுவத்தின் போக்குவரத்து பலப்படும் சீனாவுடனான எல்லையில் இந்தியாவுக்கு இது பெரும் பலத்தை தரும்.

லடாக் யூனியன் பிரதேச ஆளுநர் திரு. மாத்தூர் இந்த பணிகள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

லே மாவட்டத்தில் தெம்சாக், ஹான்லே, கர்னாக், கோர்சாக், சுமுர், டாங்க்ஸே, சூசூல், ஷயோக், ஸ்கிம்பட்டா, டிப்லிங், நெர்யாக்ஸ், கஞ்சி, மர்கா, பனாமிக், வாரிஸ், லார்க்யாப், அக்யாம், டிஸ்கிட் மற்றும் சுமோர் ஆகிய இடங்களிலும்

கார்கில் மாவட்டத்தில் குர்பாதங், பட்டாலிக், சபி, பார்சூ, செசெய்ன்ஸா, ஷெபர்ட் நாலா, ராங்டும்,டாங்கோல், படும், லோங்க்நாக், ஸங்லா, டோங்க்ரி, டாராஸ், மினாமராக், சிக்டான், நம்கிலா மற்றும் ஹினால்கோட்டி ஆகிய இடங்களிலும் இந்த தளங்கள் வர உள்ளன.

இந்த திட்டம் லடாக்கின் வரலாற்றில் மிகப்பெரிய போக்குவரத்து இணைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

இது ராணுவ ரீதியாகவும் சுற்றுலாவுக்கும் பேருதவியாகவும் அமையும் என கூறப்படுகிறது.