பாதுகாப்பு துறையில் 250 புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம் !!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறை அதிக நம்பிக்கை அளிப்பதாக உள்ளது,

2030ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு துறையின் மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர்கள் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனை உறுதிபடுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 250 புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டம் வகுத்துள்ளது.

ஏற்கனவே சுமார் 194 புதிய நிறுவனங்கள் பாதுகாப்பு துறையில் இயங்கி வருகின்றன அவை பல அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

க்ரோன் சிஸ்டம்ஸ், அஸ்டீரியா ஏரோஸ்பேஸ், ஐரோவ் மற்றும் ஆப்டிமைஸ்ட் எலெக்ட்ரோடெக் ஆகிய நிறுவனங்கள் ட்ரோன்கள், ரோபோட்,சுய நுண்ணறிவு ஆகிய பகுதிகளில் சிறப்பாக இயங்கி வருகின்றன.

மேலும் மத்திய அரசு ஐடெக்ஸ் எனும் திட்டத்தின் மூலமாக இறக்குமதியை குறைக்க எண்ணுகிறது இதற்காக சுமார் 500 கோடி ருபாய் கொண்டு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்க உள்ளது.

இது அமெரிக்காவின் டார்பா திட்டத்தை போன்றது இதன் வழியாக அமெரிக்க அரசு நிதியுதவி அளித்து பல உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கபடுத்தி அதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி உள்ளது.

மேலும் 15ஆவது நிதிக்குழு 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2.38 லட்சம் கோடி ருபாயை பாதுகாப்பு துறைக்கு செலவிட பரிந்துரை செய்துள்ளது.

இப்படியான அனைத்து திட்டங்களும் சரியாக அமல்படுத்தப்பட்டால் இந்திய பாதுகாப்பு துறல பலப்படும் மேலும் 2025 வாக்கில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதரமாக மாறும் இலக்கிற்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் என்பதை மறுக்க முடியாது.