மிக்-21 விமான விபத்து

இந்திய விமானப்படை விமானம் இன்று விபத்தில் சிக்கியதில் விமானி மரணம் அடைந்தார்.

மத்திய இந்தியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில் இருந்து மிக்21 போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டது.

திடிரென விமானம் மேலேழும்பும் போதே கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் க்ருப் கேப்டன் மட்டத்திலான விமானி மரணத்தை தழுவினார்.

இதுகுறித்த விசாரணைக்கு இந்திய விமானப்படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.