சென்காகு தீவுகளில் படைகளை குவிக்கும் ஜப்பான் !!

  • Tamil Defense
  • March 10, 2021
  • Comments Off on சென்காகு தீவுகளில் படைகளை குவிக்கும் ஜப்பான் !!

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பிரச்சினைக்குரிய பகுதி சென்காகு தீவுகள் ஆகும்.

ஜப்பானுக்கு சொந்தமான இந்த பகுதிகளை சீனா நீண்ட காலமாக அத்துமீறி உரிமை கோரி வருகிறது.

தற்போது இந்த பகுதியில் சீனா அடிக்கடி அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறது, சீன கடலோர காவல்படை நடமாட்டம் இங்கு அதிகரித்துள்ளது.

ஜப்பானிய கடலோர காவல்படையின் அறிக்கைப்படி ஃபெப்ரவரி மாதத்தில் இருந்து இரண்டு மடங்காக சீன நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

மேலும் சீனாவின் எல்லைக்குள் (அத்துமீறி உரிமை கோரும் பகுதிகளையும் சேர்த்து) வெளிநாட்டு கப்பல்கள் வந்தால் தாக்குவதற்கான சட்டத்தையும் சீனா இயற்றியது.

இதற்கு பதிலடியாக ஜப்பானும் இத்தகைய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றியது.

இதனையடுத்து சென்காகு தீவுகளில் தனது ராணுவ படைகளை குவிக்கவும் ஜப்பான் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.