களத்தில் மொசாத்; ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரபடுத்தும் இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • March 9, 2021
  • Comments Off on களத்தில் மொசாத்; ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரபடுத்தும் இஸ்ரேல் !!

ஈரான் சமீபகாலமாக இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது, மொசாத் அமைப்பும் செயலில் உள்ளது.

ஈரானிய அணுசக்தி திட்டங்கள் பற்றிய தகவல்களை திரட்ட மொசாத் அமைப்பை இஸ்ரேல் அரசு பணித்துள்ளது,

மேலும் இஸ்ரேலிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அவிவ் கோச்சாவி ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் தயாராக இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆஃப்ரிக்க நாடுகளில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அரேபிய நாடுகளின் தூதரகங்களை ஈரான் குறிவைத்துள்ள தகவல்களையும் மொசாத் அமைப்பு பரிமாறி உள்ளது.

கடந்த மாதம் 15ஆம் தேதி எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை தாக்க முயன்ற 16 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.