அதிநவீன கருவி முலம் யூரேனியத்தை செறிவுட்டும் ஈரான் !!

  • Tamil Defense
  • March 18, 2021
  • Comments Off on அதிநவீன கருவி முலம் யூரேனியத்தை செறிவுட்டும் ஈரான் !!

ஈரான் அதிநவீன ஐ.ஆர்-4 சென்ட்ரிஃப்யூஜ் கருவிகள் மூலமாக யூரேனியத்தை செறிவுட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலத்தடியில் உள்ள ஈரானின் நமாட்ஸ் அணு உலையில் இந்த யூரேனிய செறிவூட்டல் பணி நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஐ.ஆர்-1 கருவியை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

ஆனால் தற்போது ஒப்பு கொண்ட அந்த நிபந்தனைகளை மீறி ஈரான் ஐ.ஆர்-2எம் மற்றும் ஐ.ஆர்-4 ஆகிய கருவிகளை பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.