ஈரான் சீனா 25 இடையே ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்து !!

  • Tamil Defense
  • March 30, 2021
  • Comments Off on ஈரான் சீனா 25 இடையே ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்து !!

ஈரான் மற்றும் சீனா ஆகியவை நேற்று 25 ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டுள்ளன, இதன்படி சீனா சுமார் 400 பில்லியன் டாலர் அளவில் ஈரானில் முதலீடு செய்யும்.

இந்த ஒப்பந்தம் பல கட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே கையெழுத்து ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரிஃப் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் 20 ஷரத்துகள் உள்ளதாகவும் அவற்றை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியே சொல்லபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் மற்றும் சீனா இடையேயான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 600 பில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என்ற இலக்கும்,

சீனா சுமார் 400 பில்லியன் டாலர்கள் அளவில் ஈரானில் எரிவாயு, எண்ணெய், அணுசக்தி போன்ற முதலீடு செய்யவும்,

சீனாவின் தொலைநோக்கு திட்டமான “பெல்ட் அன்ட் ரோடு” திட்டத்தில் ஈரானை ஒரு கூட்டாளியாகவும் சேர்த்து கொள்கிறது.

இந்த ஒப்பந்தம் ஈரான் மற்றும் சீனா இடையேயான நட்பில் ஒரு புது அத்தியாயமாக பார்க்கப்படுகிறது, மேலும் அமெரிக்க ஈரான் உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் இந்தியா ஈரான் இடையேயான உறவில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.