1 min read
சீன விமானங்களை விட தேஜஸ் சிறப்பானது; அமெரிக்க இதழ் புகழாரம் !!
சீன போர் விமானங்களை விட இந்தியாவின் தேஜாஸ் சிறந்தது என அமெரிக்க இதழான ஃபாரின் பாலிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரையில் சீனர்கள் வழங்க தயாராக உள்ள எந்த விமானத்தை விடவும் தேஜாஸ் சிறப்பு மிக்கது எனவும்,
தேஜாஸில் உள்ள அமெரிக்க ஜி.இ என்ஜின், இஸ்ரேலிய ஏவியானிக்ஸ் அமைப்பு ஆகியவை அதன் திறனுக்கு சாட்சி எனவும்,
40 வருடங்களாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்ட என்ஜின் கொண்ட தேஜாஸ் விமானத்தை யாரும் சந்தேகிக்க போவதில்லை
ஆனால் திருட்டுத்தனமாக காப்பி அடித்து உருவாக்கப்பட்ட ரஷ்ய என்ஜின் கொண்ட போர் விமானத்தை யாரும் எளிதில் விரும்ப போவதில்லை எனவும் அக்கட்டுரை கூறுகிறது.