
இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையில் இணைகிறது !!
இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக தயாரித்த இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்த வருடம் படையில் இணைய உள்ளது.
முதலாவது நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். அரிஹந்த் ஏற்கனவே படையில் உள்ளது, இரண்டாவது கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். அரிகாட் ஆகும்.
இந்த இரண்டு கப்பல்களும் சுமார் 6000 டன்கள் எடை கொண்டவை ஆகும் இதற்கடுத்த இரண்டு கப்பல்களும் சுமார் 7000 டன்கள் எடை கொண்டவையாக இருக்கும்.
அரிஹந்த் மற்றும் அரிகாட் கப்பல்களில் 3500கிமீ செல்லும் 4 கே-4 அல்லது 750கிமீ செல்லும் 12 கே-15 அணு ஆயுத ஏவுகணைகள் இருக்கும்.
ஐ.என்.எஸ் அரிகாட் கடந்த 2017ஆம் ஆண்டு ரகசியமாக அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.