இந்திய கடற்படைக்கு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 24 எம்.ஹெச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
வருகிற ஜூன் முதல் செப்டம்பர் இடையிலான காலகட்டத்தில் முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக டெலிவரி செய்யப்பட உள்ளன.
இதை முன்னிட்டு இந்த ஹெலிகாப்டர்களில் பயிற்சி பெற விமானிகள், டெக்னீசியன்கள் அடங்கிய குழு அமெரிக்கா செல்ல உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடமே தொடங்கி இருக்க வேண்டிய பயிற்சி காலதாமதமாக இப்போது துவங்க உள்ளது.
நான்காம் தலைமுறை ஹெலிகாப்டர்களான இவை ஏவுகணைகள் மற்றும் நீரடிகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டவை ஆகும்,
மேலும் இவை உலகின் தலைசிறந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஹெலிகாப்டர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
நமது கடற்படை பயன்படுத்தி வரும் சீ கிங் ரக ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக அமையும் அடுத்த ஐந்து வருடங்களில் 24 ஹெலிகாப்டர்களும் டெலிவரி செய்யப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.