
நேற்று முன்தினம் இந்திய கடற்படைக்கு சொந்தமான இல்யூஷின்-38 நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை விமானத்தில் இருந்து அதிநவீன இலகுரக நீரடிகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த நீரடிகணையை கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.
இந்த நீரடிகணை சிறப்பு வகையான பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து இலக்கை நோக்கி வீசப்பட்டது, இதற்கான பாராசூட்டை ஆக்ராவில் உள்ள ஏ.டி.ஆர்.டி.இ அமைப்பு வடிவமைத்து உள்ளது.
பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் இந்திய கடற்படையின் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்பார்வை செய்தனர்.
இந்த சோதனை வெற்றி பெற்றதால் தன்னிறைவு பெறுவதில் ஒரு அடி மேலும் முன்னேறியதோடு நமது நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் வலுவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.