
இந்திய கடற்படையின் கப்பல்கள் முதல் முறையாக வங்கதேச துறைமுக நகருக்கு இந்த மாதம் செல்ல உள்ளன.
ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ். குலிஷ் மற்றும் ஒரு கார்வெட் ரக கப்பல்கள் வங்கதேசத்தின் மோங்லா எனும் துறைமுக நகருக்கு செல்ல உள்ளன.
இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது, மேலும் வங்கதேச விடுதலை போரின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதி ஆகும்.
இந்த சுற்றுபயணத்தின் போது இந்திய கடற்படை அதிகாரிகள் வங்கதேச கடற்படை அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளனர்.
மேலும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் இரு நாட்டு கடற்படைகளாலும் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.