
ஒமன் வளைகுடாவில் மீட்பு பணியில் இந்திய கடற்படை !!
ஒமன் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். தல்வார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
கடந்த 11ஆம் தேதி எம்.வி. நயான் எனும் வர்த்தக கப்பல் தங்களது கப்பல் என்ஜின் கோளாறு காரணமாக செயலிழந்து உள்ளதாக உதவி கோரியது.
இதனையடுத்து அங்கு விரைந்த ஐ.என்.எஸ். தல்வார் ஒரு குழுவை அனுப்பி கப்பலை பழுது பார்க்க உதவியது சுமார் 7 மணிநேரம் கழித்து கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த கப்பலின் மாலுமிகளில் 7 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.