மடகாஸ்கருடன் கடற்சார் உறவை மேம்படுத்தும் இந்திய கடற்படை

  • Tamil Defense
  • March 31, 2021
  • Comments Off on மடகாஸ்கருடன் கடற்சார் உறவை மேம்படுத்தும் இந்திய கடற்படை

மடகாஸ்கர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்கனவே இந்திய கடற்படையை சேர்ந்த ஐந்து இந்தியன் மொபைல் ட்ரெயினிங் குழு மடகாஸ்கர் சென்றிருந்தது.தற்போது அந்த குழு 50 மலகாசே சிறப்பு படை வீரர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சியை வழங்கியுள்ளது.இந்த மலகாசே சிறப்பு படை என்பது மடகாஸ்கர் கடற்படை மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்த சிறப்பு படை ஆகும்.

கடந்த மார்ச் 14 முதல் 28 வரை இந்திய குழு மடகாஸ்கர் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கியுள்ளது.இதற்காக மடகாஸ்கரின் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் லியோன் ஜீன் ரிச்சர்டு இந்தியாவிற்கு தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.

இந்த பயிற்சி தங்களது நாட்டை பாதுகாக்கவும், வீரர்கள் தங்களது திறமையை வளர்த்து கொள்ளவும் உதவும் என அமைச்சர் கூறியுள்ளார்.