
உங்கள் கடற்படை எங்கள் கடற்படையை ஒடுக்குகிறது; சீனர்கள் புகார் !!
கிழக்கு லடாக்கில் படைகளை பின்விலக்குவது பற்றி இந்திய மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது நடைபெற்ற ஒரு நிகழ்வை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது சீன தரப்பு அதிகாரிகள் இந்திய தரப்பை சேர்ந்த அதிகாரிகளிடம் புகார் ஒன்றை சமர்பித்து உள்ளனர்.
அந்த புகாரில் இந்திய கடற்படை கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் சீன கப்பல்களை மிக மோசமாக நடத்துகின்றன என்பது தான் அந்த புகார்.
இந்திய கடற்படை சமீப காலங்களில் சீன கடற்படையை ஒடுக்க அதிக தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.