மஹிந்திரா இலகுரக சிறப்பு வாகனங்களை ஆர்டர் செய்த பாதுகாப்பு அமைச்சகம்

  • Tamil Defense
  • March 22, 2021
  • Comments Off on மஹிந்திரா இலகுரக சிறப்பு வாகனங்களை ஆர்டர் செய்த பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மஹிந்திரா டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி மஹிந்திரா நிறுவனம் 1300 இலகுரக சிறப்பு வாகனங்களை ( Light Specialist Vehicle ) இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வழங்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1056கோடிகள் ஆகும்.மேலும் இந்த வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் நான்கு வருடங்களில் தயாரித்து பாதுகாப்பு படைகளுக்கு வழங்கும்.

இந்த சிறப்பு இலகுரக கவச வாகனங்கள் இன்பான்ட்ரி படைப் பிரிவுகளுக்கு வழங்கப்படும்.இந்த வாகனங்களில் கனரக இயந்திர துப்பாக்கிகள், தானியங்கி கிரேனேடு லாஞ்சர்கள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இணைத்து பயன்படுத்த முடியும்.