
இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக அதிநவீன கொத்து குண்டுகளை தயாரித்து உள்ளது.
சுமார் 1000 கிலோ எடையுடன் , 100 கிலோமீட்டர் தாக்குதல் வரம்புடனும், சிறிய இறக்கைகள் உடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில் இரு வகைகள் உள்ளன அவையாவன;
கருத்மா – இது இறக்கைகளை கொண்ட குண்டு ஆகும். இதன் தாக்குதல் வரம்பு சுமார் 100 கிலோமீட்டர்.
கருடா – இது இறக்கைகள் அற்ற மற்றொரு குண்டு ஆகும், இதன் தற்போதைய தாக்குதல் வரம்பு 30 கிலோமீட்டர் எதிர்காலத்தில் 100 கிலோமீட்டராக அதிகரிக்கப்படும்.
இந்த வகை மிதவை குண்டுகள் ஏவுகணைகளை விட மலிவானதும் இவற்றில் என்ஜின் போன்ற அமைப்புகள் கிடையாது மாறாக சிறிய இறக்கை போன்ற அமைப்புகள் தான் திசை மாற்றிகளாக செயல்படும்.
மேலும் இதில் உள்ள தேடுதல் கருவி சாட்டிலைட் வழியாக தகவல்களை பெற்று இலக்கை நோக்கி வழிநடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.