
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா மிஷன் ஷக்தி என்ற பெயரில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்தது.
இதற்கு அடுத்த காலகட்டங்களில் இந்தியா தனது விண்வெளி ராணுவ திறன்களை கணிசமான அளவில் வளர்த்து கொண்டுள்ளது.
இந்த பணிக்காக விண்வெளி பாதுகாப்பு முகமை என்ற அமைப்பும் அதன் ஒரு பிரிவாக விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சி முகமை ஆகியவை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.
சமிக்ஞை உளவு, மின்னனு உளவு மற்றும் தகவல் உளவு போன்ற திறன்களை வளர்த்து கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய காலகட்டத்தில் விண்வெளி ராணுவ திறன் என்பது தவிர்க்க முடியாததாகவும் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி ஆகவும் பார்க்கப்படுகிறது.